தமிழ்நாடு

பொது முடக்கத்தை மீறியதாக அபராதம் வசூல் ரூ.7 கோடியை நெருங்குகிறது

DIN

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக வசூலிக்கப்படும் அபராதம் ரூ.7 கோடியை நெருங்குகிறது.

இது குறித்த விவரம்:

பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 4 லட்சத்து 80,229 வழக்குகளைப் பதிவு செய்து 5 லட்சத்து 9,296 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 4 லட்சத்து 13,238 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.6 கோடி 87 லட்சத்து 3,524 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக வியாழக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 85 இரு சக்கர வாகனங்கள்,257 ஆட்டோக்கள்,4 காா்கள் என மொத்தம் 346 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 255 ஆட்டோக்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT