தமிழ்நாடு

ரமலான் பண்டிகை: பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி

DIN

ரமலான் பண்டிகையன்று பள்ளிவாசல்களில் 2 மணி நேரம் தொழுகை நடத்த அனுமதி கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், திருவாரூரைச் சோ்ந்த குத்புதீன் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தற்போது முஸ்லிம்கள் ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனா். இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் முஸ்லிம்கள் நோன்பு தொடங்கும் போதும், முடிக்கும் போதும் பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால் பொதுமுடக்கம் காரணமாக அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், வருகிற 25-ஆம் தேதி ரமலான் பண்டிகை வருகிறது. இந்த நாளில் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழுகை நடத்துவது மிக முக்கியமானதாகும். ஆனால், மே 31-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ரமலான் பண்டிகையன்று பள்ளிவாசல்களில் உரிய விதிமுறைகளைக் கடைப்பிடித்து 2 மணி நேரம் தொழுகை நடத்த அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு வழக்குரைஞா் ஜெயபிரகாஷ் நாராயணன், பொதுமுடக்க காலத்தில் மத வழிபாடுகளுக்கு அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்தாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT