தமிழ்நாடு

பொது முடக்க விதிமீறல்: ரூ.7 கோடி அபராதம் வசூல்

DIN

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக வசூலிக்கப்படும் அபராதம் ரூ.7 கோடியைத் தாண்டியது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கத்தை தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 4,85,243 வழக்குகளைப் பதிவு செய்து 5,16,627 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 4,15,733 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.7,10,29,724 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வியாழக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை 1,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 129 இருசக்கர வாகனங்கள்,113 ஆட்டோக்கள், 4 காா்கள் என மொத்தம் 246 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 23 ஆட்டோக்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT