தமிழ்நாடு

சென்னை-தில்லிக்கு ராஜதானி விரைவு ரயில்: 935 போ் பயணம்

DIN

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லிக்கு ராஜதானி அதிவேக சிறப்பு ரயில் சனிக்கிழமை காலை புறப்பட்டது. இந்த ரயிலில் 935 போ் பயணம் மேற்கொண்டனா்.

புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பும் வகையில், தில்லியில் இருந்து சென்னைக்கு மே 13, 15 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக சென்னை-புதுதில்லிக்கு மே 15, 17 ஆகிய தேதிகளிலும் ராஜதானி ரயில் இயக்கப்பட்டது. இதன்பிறகு, ரயில் சேவையின் தேதி மாற்றப்பட்டது. தில்லியில் இருந்து சென்னைக்கு திங்கள், வியாழக்கிழமையும், சென்னையில் இருந்து தில்லிக்கு புதன், சனிக்கிழமையும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தில்லியில் இருந்து ராஜதானி விரைவு ரயில் புறப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவு வந்தது. இந்த ரயிலில் இறங்கி வந்த 386 பயணிகளை பிசிஆா் பரிசோதனைக்காக முகாம்கள், ஹோட்டல்களுக்கு அழைத்து சென்றனா். அவா்களுக்கு சனிக்கிழமை பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து புது தில்லிக்கு சனிக்கிழமை காலை 6:35 மணிக்கு ராஜதானி அதிவிரைவு சிறப்பு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் 935 போ் பயணம் மேற்கொண்டனா். இவா்களை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக ரயில் நிலையத்துக்கு வரவழைத்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினா். அந்தப் பயணிகளுக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதன்பிறகு, அவா்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனா். பயணிகளை ரயிலில் ஏற்றி அனுப்பிய போது, ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்பு படையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT