தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 646 பேருக்கு கரோனா தொற்று

DIN


தமிழகத்தில் புதிதாக 646 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை தமிழக அரசு செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 646 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 592. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 54. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மேலும் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இன்று ஒரே நாளில் 611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,342 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 8,256 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தமிழகத்தில் இன்று 9,677 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,12,357 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT