தமிழ்நாடு

இமாச்சலில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு? - அமைச்சர் மறுப்பு

DIN

இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு என்பது தவறான தகவல் என அம்மாநில அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார். 

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர், சோலன் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று அதிகமாக இருப்பதன் காரணமாக இவ்விரு மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், இமாச்சல் மாநிலம் முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு என தகவல்கள் வெளியாகி வந்தன. 

இதனை மாநில கல்வி அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் மறுத்துள்ளார். மேலும் அவர் பேசுகையில்,' மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. மாநில அரசு அத்தகைய முடிவு எதுவும் எடுக்கவில்லை.

அதே நேரத்தில் மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் எடுக்கும் முடிவு மாநிலங்களுக்குப் பொருந்தாது. எனவே இமாச்சலில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்' என்று விளக்கம் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT