தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 817 பேருக்கு கரோனா தொற்று

DIN


தமிழகத்தில் புதிதாக 817 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 817 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 558 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 18,545 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இன்று கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 678. இதுதவிரத்து மகாராஷ்டிரத்திலிருந்து திரும்பியவர்களில் 138 பேருக்கும், கேரளத்திலிருந்து திரும்பிய ஒருவருக்கும் கரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இன்று மேலும் 6 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இன்று ஒரேநாளில் 567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தம் 9,909 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 8,500 பேர் சிகிச்சையில் (தனிமைப்படுத்தல் உட்பட) உள்ளனர்.

இன்று 10,661 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4,23,018 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT