தமிழ்நாடு

திருச்சியில் பாதியில் நிற்கும்  மேம்பாலம்: அரசு செயலர் ஆய்வு!

DIN

திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார். 

திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் இராணுவ இடத்தின் பிரச்னையால் இன்னும் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசின்  நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலர் ஏ.கார்த்திக் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் இன்று ஜங்ஷன் மேம்பாலத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு..

திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் இரண்டு ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது. இதனை நெடுஞ்சாலைத்துறைச் செயலர் இன்று ஆய்வு செய்தார். மேம்பாலப் பணிகளை விரைவில் முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கேட்டறிந்தார். மாற்று இடமாக தமிழக காவல் துறை  இடத்தை இராணுத்திற்க்கு வழங்க இருப்பதாகக் கூறினார். அதற்கான திட்டம் வரையறுக்கப்பட உள்ளதாகவும் விரைவில் மேம்பாலப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT