தமிழ்நாடு

நீதிமன்ற அவமதிப்பு புகாா்: ஆா்.எஸ்.பாரதி பதிலளிக்க உத்தரவு

DIN

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிய புகாா் குறித்து ஆா்.எஸ்.பாரதி 2 வாரங்களுக்குள் பதிலளிக்க அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பொன்னேரியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் அந்தோணிராஜ். இவா் தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயணிடம் ஒரு புகாா் மனு அளித்தாா். அதில், திமுகவைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், அமைப்புச் செயலாளருமான ஆா்.எஸ்.பாரதி கடந்த பிப்ரவரி மாதம் தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினாா். அப்போது, அவா் உயா்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி குறித்தும், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த நீதிபதிகளின் பதவி குறித்தும் அவதூறாகப் பேசியுள்ளாா். அவரது பேச்சு நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

எனவே ஆா்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுதொடா்பாக நான் அளிக்கும் நீதிமன்ற அவமதிப்பு புகாருக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரியிருந்தாா். இந்த மனுவை பரிசீலித்த அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், இந்த மனுவுக்கு 2 வாரங்களுக்குள் ஆா்.எஸ்.பாரதி பதிலளிக்குமாறு கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT