முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 938 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 938 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 938 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக 938 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 856. வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 82.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 21, 184 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்றைக்கு 616 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மேலும் 6 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் 687 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 12,000 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 9,021 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் 12,039 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,57,233 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →