திருச்சியில் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி
திருச்சியில் வீட்டிலுள்ள சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
திருச்சியில் வீட்டிலுள்ள சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
திருச்சி பூலாங்குடி காலனியில் 2 மகள்கள், 1 மகனுடன் வசித்து வந்தவர் ஆசிரியர் கௌரி. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவரது வீட்டிலுள்ள சிலிண்டர் வெடித்தது. இதில் ஆசிரியர் கௌரி, மகள்கள் மற்றும் மகன் ஆகிய நால்வரும் பலியாகினர்.
தகவலறிந்த நவல்பட்டு காவல் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று சிலிண்டர் வெடித்ததன் காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement