வீரகனூர் அருகே மின்கசிவால் தொடர்ச்சியாக 4 வீடுகள் எரிந்து நாசம்
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூரை அடுத்த கவர்பனை கிராமத்தில் மின்கசிவு காரணமாக அருகருகே இருந்த நான்கு வீடுகள் ஞாயிற்றுக்கிழமை மாலை தீப்பிடித்து எரிந்து நாசமாகின.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூரை அடுத்த கவர்பனை கிராமத்தில் மின்கசிவு காரணமாக அருகருகே இருந்த நான்கு வீடுகள் ஞாயிற்றுக்கிழமை மாலை தீப்பிடித்து எரிந்து நாசமாகின.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரையடுத்த கவர்பனையில் சக்திவேல், காமாட்சி, சோமசுந்தரம், கிருஷ்ணன் ஆகியோர்களுக்கு சொந்தமான நான்கு கூரைவீடுகள் உள்ளன.
இதில் ஞாயிற்றுக்கிழமை,அப்பகுதியில் மின்சார வயர்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, ஒரு கூரை வீட்டில் தீப்பிடித்தது. அதையடுத்து காற்றில் தீயானது அருகில் இருந்த மற்ற மூன்று கூரை வீடுகளிலும் தீ பரவியது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். தகவலறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனர்.
Advertisement
இந்த சம்பவத்தில் கூரை வீடுகளில் இருந்த டிவி ,ஃப்ரிட்ஜ் ,பீரோ, கட்டில், மிக்ஸி, கிரைண்டர், மற்றும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, நிலப்பட்டா, வீட்டுப் பத்திரம், குழந்தைகளின் கல்விச் சான்று உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களும் எரிந்து நாசமாகி விட்டன.அப்பகுதியைச் சேர்ந்த சிலர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கிடைக்க வேண்டிய நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளனர்.
மேலும், வருவாய்த்துறையினர் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நிவாரணத் தொகைகளை கிடைக்க வட்டாட்சியர், கோட்டாட்சியர்களுக்கு உரிய அறிக்கையினை அனுப்பியுள்ளனர்.