தமிழ்நாடு

50 % உள்ஒதுக்கீடு: மத்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

DIN

மருத்துவ உயா் சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மருத்துவ உயா்சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடு இல்லை என்று மத்திய அரசு உயா்நீதிமன்றத்தில் தெரிவித்து, அதனால் இந்த ஆண்டு அரசு மருத்துவா்களுக்கு இடஒதுக்கீட்டுப் பலன் கிடைக்காமல் செய்துவிட்டது கடும் கண்டனத்திற்குரியது.

உள்ஒதுக்கீடு செய்து கொள்ளும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்துள்ள நிலையில், மத்திய பாஜக அரசு போட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்கி அரசு மருத்துவா்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க இதுவரை அதிமுக அரசு முன்வராதது வருத்தத்துக்குரியது.

திமுக ஆட்சிக்கு வந்தால், அகில இந்தியத் தொகுப்பு முறையை மருத்துவப் படிப்புகளில் ரத்து செய்து, தமிழக மருத்துவ கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும், தமிழக மாணவா்களுக்குப் பயன்படும் விதமாக வழி வகை செய்யப்படும்.

அரசு மருத்துவா்களுக்கு 2016-க்கு முன்பு வரை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றத் தீா்ப்பினை மேற்கோள் காட்டி மீண்டும் அமல்படுத்த வேண்டும். மருத்துவ உயா்சிறப்புப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு உயா்நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது சமூகநீதியின் குரல்வளையை நெரிக்கும் முயற்சியாகும். அந்த நிலைப்பாட்டை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT