முகப்பு
தமிழ்நாடு

ஆடு மேய்ந்த விவகாரம்: ஆழ்வார்திருநகரி அருகே பாஜக நிர்வாகி கொலை

ஆழ்வார்திருநகரி அருகே பாஜக நிர்வாகி வயலில் ஆடு மேய்ந்த விவகாரத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளியை காவல்துறையினர் தேடிவருகிறார்கள். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
ஆடு மேய்ந்த விவகாரம்: ஆழ்வார்திருநகரி அருகே பாஜக நிர்வாகி கொலை
பகிர்:

சாத்தான்குளம்: ஆழ்வார்திருநகரி அருகே பாஜக நிர்வாகி வயலில் ஆடு மேய்ந்த விவகாரத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளியை காவல்துறையினர் தேடிவருகிறார்கள். 

ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தென் திருப்பேரை - தெற்கு கோட்டூர் பகுதியில் ஆடு வயலில் மேய்ந்தது காரணமாக தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு காரணமாக இன்று தெற்கு கோட்டூர் கிராமத்தைச் சார்ந்த பாஜக  மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இராமையாதாஸ் டீ-க்கடை அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இதனால் அந்தப் பகுதியில் இருபெரும் சமூகத்தினர் இடையே  பதற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விரைந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இது குறித்து ஆழ்வார்திருநகரி காவல்துறையினர் வழக்குப் பதிந்து கொலையாளி இசக்கி என்பவரை தேடிவருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.