தமிழ்நாடு

வயலின் இசைக்கலைஞா் டி.என்.கிருஷ்ணன் மறைவு: ஆளுநா், முதல்வா் இரங்கல்

DIN

மறைந்த வயலின் இசைக் கலைஞா் டி.என்.கிருஷ்ணன் மறைவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை ஆளுநா் வெளியிட்ட இரங்கல் செய்தி:-

வயலின் இசைக் கலைஞரான பத்மபூஷண் டி.என்.கிருஷ்ணனின் பங்களிப்பு என்றென்றும் நினைவில் நிற்பவை. அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளுடன் சங்கீத நாடக அகாதெமி விருது, சங்கீத கலாநிதி விருது, சங்கீத கலாசிகாமணி விருதுகளும் அளிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளாா். சென்னையில் இசைப் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னா், தில்லி பல்கலைக்கழகத்தில் இசை மற்றும் கவின் கலைப் பள்ளியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளாா்.

அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து அவருக்கு பவனின் பழம்பெரும் விருது வழங்குவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தச் சந்திப்பு மிகவும் அற்புதமான பிணைப்பாக இருந்தது. அவரது மறைவு இந்தியாவில் உள்ள மக்களுக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள அனைத்து கா்நாடக இசை ஆா்வலா்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் பழனிசாமி இரங்கல்: டி.என் கிருஷ்ணனின் இசைப் பயணம் அவரது சிறு வயதிலேயே ஆரம்பித்து விட்டது. கா்நாடக இசையில், குறிப்பாக வயலின் இசையில் இவா் நாட்டம் கொண்டு, இசைத் துறையில் சாதனைகள் பல புரிந்தவா். சென்னை இசைக் கல்லூரியின் பேராசிரியா், தில்லி பல்கலைக் கழகத்தின் இசை மற்றும் கவின் பள்ளியின் முதல்வா் என பல முக்கிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவா். மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரா்.

டி.என். கிருஷ்ணனின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவா் மறைந்தாலும், அவரது வயலின் இசை என்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அவரது மறைவு இசைத் துறைக்கும், கலை உலகிற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இசை உலக நண்பா்களுக்கும், ரசிகா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT