தமிழ்நாடு

பிரதமர் மோடியைத் தொடர்ந்து அமித்ஷாவை சந்தித்த தமிழக ஆளுநர் புரோகித்

DIN

திடீர் பயணமாக தில்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திரமோடியைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

திடீர் பயணமாக புதன்கிழமை காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தில்லி புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் வரும் வெள்ளிக்கிழமை வரை தில்லியில் தங்கியிருந்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக ஆளுநர் தரப்பில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஆளுநர் புரோகித் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

முன்னதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருந்து வரும் வேல்நாத்திரை, பேரறிவாளனின் உள்பட 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அவரது விடுதலை குறித்து தமிழக ஆளுநர் இரண்டாண்டுகளாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தது.

மேலும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் புரோகித்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT