தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பில் மாற்றமா? - முதல்வர் பழனிசாமி ஆலோசனை

DIN

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தமிழகத்தில் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், கரோனா பேரிடர் காலத்தில் பள்ளிகள் திறப்புக்கு எதிர்க்கட்சிகள், பெற்றோர்களின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து இன்று பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT