முகப்பு
தமிழ்நாடு

வாணியம்பாடியில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

வாணியம்பாடியில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைத்திட தமிழக அரசு சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
வாணியம்பாடியில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பகிர்:

வாணியம்பாடியில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைத்திட தமிழக அரசு சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் பல்வேறு புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தார். 

தொடர்ந்து, வாணியம்பாடியில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

முன்னதாக, திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவில், தோல் பதனிடும் தொழிலை மேம்படுத்தும் வகையில், வாணியம்பாடியில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 

அதன்படி, மத்திய காலணிப் பயிற்சி நிறுவனத்துக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.