முகப்பு
தமிழ்நாடு

ஓமலூரில் அதிமுகவில் ஏராளமானோர் இணைந்தனர்

ஓமலூரில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
ஓமலூரில் அதிமுகவில் ஏராளமானோர் இணைந்தனர்
பகிர்:

ஓமலூரில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

இதில், ஓமலூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் கலந்துகொண்டு கட்சியில் இணைந்த இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு பொன்னாடை போர்த்தி அவர்களை வரவேற்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கு பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்ப்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து புதியதாக இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக ஓமலூர் பேரூராட்சி செயலாளர் சரவணன், ஓமலூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ராஜேந்திரன், தளபதி, ராஜா உள்ளிட்ட அதிமுக தொணடர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →