வேல் யாத்திரை தொடங்க திருத்தணியில் கூடும் பாஜகவினர்: காவல்துறை குவிப்பு
பாஜகவின் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் அக்கட்சியினர் அனுமதியை மீறி வேல் யாத்திரை தொடங்க திருத்தணியில் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் அக்கட்சியினர் அனுமதியை மீறி வேல் யாத்திரை தொடங்க திருத்தணியில் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு 1300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருத்தணி முருகன் மலைக்கோயில் செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை 30 நாட்கள் தொடர்ந்து வேல் யாத்திரை நடைபெறும் என்று கூறியிருந்தார். ஆனால், கரோனா பரவல் காரணமாக தமிழக அரசு யாத்திரைக்கு அனுமதி மறுத்துவிட்டது. இருப்பினும் அக்கட்சியினர் வேல் யாத்திரையைத் தொடங்க திருத்தணி நகரில் பல்வேறு பகுதியிலிருந்து பாஜகவினர் குவிந்துள்ளனர். அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நரேந்திரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் திருத்தணி -சென்னை பைபாஸ் சாலையில் குவிந்துள்ளனர்.
திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட மேற்பட்ட காவல்துறையினர் திருத்தணி மலைக் கோவில், சென்னை பைபாஸ் சாலை, சித்தூர் சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருத்தணி-சென்னை பைபாஸ் சாலையில் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் வேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் அங்கு காவல்துறையினர் குவிந்தனர். தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்கினால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் திருத்தணியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.