தமிழ்நாடு

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி

DIN

விழுப்புரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருந்து வரும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன், கடந்த ஒரு மாத காலமாக பரோலில் வெளியே வந்து வீட்டில் உள்ளார். அவருக்கு மேலும் இரண்டு வாரம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார்.

சனிக்கிழமை காலை ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட அவர், விழுப்புரம் நேருஜி சாலை, காந்தி சிலை அருகே உள்ள மரகதம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து சேர்ந்தார்.

மருத்துவர்கள் தியாகராஜன், ரவிச்சந்திரன் ஆகிய சிறப்பு மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே அவர் புழல் சிறையில் இருந்தபோது அரசு மருத்துவர்களாக இருந்த இவர்கள் சிறுநீரகம், தோல் நோய் தொடர்பாக தொடர் சிகிச்சை வழங்கியவர்கள் என்பதால், தற்போது வெளிவந்துள்ள நிலையில் விழுப்புரத்தில் உள்ள அந்த மருத்துவரின் மருத்துவமனையில், சிகிச்சை பெறுவதற்காக பேரறிவாளன் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தாயார் அற்புதம்மாள் உடன் உள்ளார்.

ஆயுள் தண்டனை கைதி மருத்துவமனைக்கு வந்துள்ளதால், அந்த மருத்துவமனையை சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT