தமிழ்நாடு

கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆசிரியர்கள் வரவேற்பு

DIN


திருச்சி: மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரிய கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கி பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. 

திருச்சியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின்னர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலர் ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறியபோது, "அரசுப்பள்ளி மாணவருக்கு, மருத்துவப்படிப்பில் சேர, 7.5 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியது வரவேற்கத்தக்கது.

அதேபோல, அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு, கூடுதலாக, 2.5 சதவீதம் என, 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்க வேண்டும்.

பள்ளிகளை திறக்க வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரிய கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கி பள்ளிகளை திறக்க வேண்டும்.

போராட பயம்? எங்களது நீண்ட கால கோரிக்கைகளான, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். இதற்காக போராடிய, 5,600 ஆசிரியர்கள் மீதான, 17பிஐ ரத்து செய்ய வேண்டும்.

கரோனா காலம் என்பதால் தமிழக அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தற்போது மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடியாது. 

அதற்கு பதில், சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுத்து உள்ளோம். ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்" என்று ரங்கராஜன் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT