கல்லூரிகள் திறப்பு குறித்து நவ. 12-ல் முடிவு: அமைச்சர் கே.பி. அன்பழகன்
தமிழக அரசு அறிவித்தபடி நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? என்ற கேள்விக்கு இது குறித்து நவம்பர் 12-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ள
சென்னை: தமிழக அரசு அறிவித்தபடி நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? என்ற கேள்விக்கு இது குறித்து நவம்பர் 12-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், கரோனா தொற்றுப் பரவல் முற்றிலும் அகலாத நிலையில், பள்ளிகளைத் திறக்க பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா், ஆசிரியா் கழக நிா்வாகிகள், பெற்றோா், தனியாா் பள்ளிகள் நிா்வாகம் ஆகியோரின் கருத்துகளைக் கேட்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் இன்று கருத்துக் கேட்கப்படும் நிலையில் கல்லூரிகள் திறப்பு பற்றி கேள்வி எழுந்துள்ளது.
செய்தி ஊடகம் ஒன்றுக்கு பதிலளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? என்பது பற்றி வரும் 12-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. இந்தநிலையில் வரும் நவ.16-ஆம் தேதியில் இருந்து 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் திங்கள்கிழமை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.