காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு கரோனா
காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக மகேஸ்வரி ரவிக்குமார் கடந்த அக்டோபர் மாதம் முப்பதாம் தேதி புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த இரு தினங்களாக நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. தீபாவளி: கோயம்பேட்டிலிருந்து 24 மணி நேரமும் சிறப்பு இணைப்புப் பேருந்துகள்
ஆட்சியர் புதிதாக பொறுப்பேற்ற பிறகு வெள்ளத் தடுப்பு பணிகள் மற்றும் காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கையில் தார்ச்சாலை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பலரும் பங்கேற்ற ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியது உள்ளிட்ட காரணங்களால் அவருக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிய வருகிறது.
Advertisement
இதனால் அவர் தனது முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.