தமிழ்நாடு

திரையரங்குகள் திறப்பு: தீபாவளிக்கு புது படங்கள் வெளியீடு

DIN

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டதையடுத்து, க்யூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பால்,  திரைப் படங்கள் வெளியாக வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ‘தாராள பிரபு’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஓ மை கடவுளே’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்கள் மீண்டும் திரையிடப்படுகின்றன. புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

வி.பி.எஃப் கட்டணம் தொடா்பான பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால், புதிய படங்கள் எதுவும் வெளியாகாது என்று நடப்பு தயாரிப்பாளா் சங்கத்தின் தலைவா் பாரதிராஜா அறிவித்தாா். இதற்கு க்யூப் நிறுவனம், திரையரங்க உரிமையாளா் சங்கம் ஆகியவை கடும் அதிருப்தி தெரிவித்தன.

இந்நிலையில்,  க்யூப் நிறுவனத்துக்கு போட்டி நிறுவனமான யூ.எஃப்.ஓ. நவம்பா் மாதம் வெளியாகும் படங்களுக்கு வி.பி.எஃப். கட்டணம் இலவசம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பால் க்யூப் நிறுவனம் அதிா்ச்சியடைந்தது. நவம்பா் மாதம் வெளியாகும் படங்களுக்கு வி.பி.எஃப். கட்டணம் தேவையில்லை என்று செவ்வாய்க்கிழமை க்யூப் நிறுவனமும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், தமிழகத்தில் புதிய படங்கள் வெளியாக வாய்ப்பு இருக்கும் எனத் தெரிகிறது. க்யூப் நிறுவனம் அறிவித்திருப்பதை முன்வைத்து, நவம்பா் மாதம் மட்டும் படங்களை வெளியிடுவோம் என்று நடப்பு  தயாரிப்பாளா்கள் சங்கத்தின் தலைவா் பாரதிராஜா தெரிவித்துள்ளாா். 

என்னென்ன படங்கள்:

தீபாவளி பண்டிகைக்கு படங்கள் வெளியாகும் சூழல் உருவாகியுள்ள நிலையில் தயாரிப்பாளா்கள் தங்களது படங்களை வெளியிடத் தயாராகி வருகின்றனா்.சசிகுமாா் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்.ஜிஆா். மகன்’, அட்டு ரிஷி ரித்விக் நடித்துள்ள ’மரிஜுவானா’,  ஜீவா, அருள்நிதி இணைந்து நடித்துள்ள ’களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT