தமிழ்நாடு

சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை

DIN


சென்னை: கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. 

சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தையொட்டி, கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, சென்னை மாநகா்ப் பகுதிகளான சைதாப்பேட்டை, தியாகராய நகா், வேளச்சேரி, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், கோயம்பேடு, எழும்பூா், புரசைவாக்கம், பாரிமுனை, ராயபுரம், அண்ணா நகா், அம்பத்தூா், பாடி, கீழ்ப்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, கிண்டி, அடையாறு, திருவிக நகா், அண்ணா சாலை, பூந்தமல்லிசாலை என மாநகரின் முக்கியப் பகுதிகளிலும், தாம்பரம், குரோம்பேட்டை, திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய புறநகர் பகுதிகளிலும் வியாழக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.  

சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் அலுவலகம் செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் 

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஆந்திரம் கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

குடிநீா் விநியோகப் பிரச்னைக்கு தீா்வு தந்த கோடை மழை நெல், உளுந்துக்கு பயன் : பருத்தி,எள்,கடலைக்கு பாதிப்பு

SCROLL FOR NEXT