முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த அருண் சுரேஷ் - அருண் வெங்கடேஷ்.
பகிர்:


தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் புதியபுத்தூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேல அரசரடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் - பூரணம் தம்பதியின் குழந்தைகளான அருண் சுரேஷ் (12) மற்றும் அருண் வெங்கடேஷ் (12) ஆகிய இருவரும் புதன்கிழமை செல்வராஜிக்கு சொந்தமான மேல அரசரடி பகுதியிலுள்ள வெங்கடேஷ் ஹோட்டலில் வீட்டிற்கு உணவு வாங்கச் சென்றுள்ளனர்.

இரவு ஆகியும் இருவரும் வீட்டிற்கு திரும்பாததால் காணாமல் போன சிறுவர்களின் தாயார் பூரணம் அளித்த புகாரின் பேரில் புதியமபுத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சிறுவர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுவர்கள் இருவரும் மேல அரசடியில் உள்ள ஒரு குளத்தில் வியாழக்கிழமை சடலமாக கிடந்தனர். 

இருவரது சகலத்தையும் கைப்பற்றிய புதியபுத்தூர் போலீசார் அவர்கள் எப்படி இறந்தனர் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →