தொடர் விடுமுறையை முன்னிட்டு பாபநாசத்தில் குழந்தைகள் குடும்பத்தினருடன் தாமிரவருணியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள். 
தமிழ்நாடு

தீபாவளி தொடர் விடுமுறை: பாபநாசத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் குவிந்தனர்.

DIN

அம்பாசமுத்திரம்: தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் குவிந்தனர்.

சனிக்கிழமை தீபாவளியைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் தமிழகத்தில் பயணிகள் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று குதூகலித்து வருகின்றனர். 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் தாமிரவருணி நதியில் நீராட திருநெல்வேலி, தென்காசி, விருந்துநகர், தூத்துக்குடி,, கோயம்புத்தூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பாபநாசத்திற்கு குடும்பத்தினருடன் வந்தனர். பாபநாசம் தாமிரவருணியில் நீராடி பாபநாசம் சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தும் சென்றனர்.

தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் குளிக்க பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து பாபநாசத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. பாபநாசம் கோவில் படித்துறை, அய்யா கோவில் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள், குழந்தைகள், நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்து தாமிரவருணியின் அழகை ரசித்து மகிழ்ந்தனா்.

விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT