முகப்பு
தமிழ்நாடு

ஏற்காட்டில் பனி மூட்டம்:  குவியும் சுற்றுலாப் பயணிகள்

 தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
ஏற்காட்டில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்
பகிர்:

ஏற்காடு:  தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சேலம் மற்றும் பிறபகுதிகளிருந்து கார்கள், வேன்கள்,சுற்றுலா பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் வரதுவங்கிய சுற்றுலாப் பயணிகள் சாரல் மழை பனி மூட்டங்களில் தவழ்ந்து வரும் பாதைகளில் நீர் அருவியின் இயற்கை அழகை கண்டு மகிழ்ந்தனர். 

பனி மூட்டங்களில் தவழ்ந்து வரும் வாகனங்கள்.

ஏற்காடு சுற்றுலாப் பகுதியான அண்ணா பூங்கா, சேர்வராயன் கோவில், கரடியூர் வன காட்சி பகுதி ரோஜா தோட்டம், பக்கோடா காட்சி பகுதிச, கிளியூர் நீர் அருவி,அரசு தாவரவியல் பூங்கா போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். 

சுய புகைப்படங்கள் எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்.

மேக மூட்டங்களின் நடுவில் சுய புகைப்படங்கள் எடுத்து மகிந்து வருகின்றனர். சுற்றுலா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சுற்றுலா பகுதி சாலையேர கடைகளில் மக்கள் கூட்டம் காணமுடிகிறது. சுற்றுலா விடுதிகள், உணவகங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →