விழுப்புரம் வரைவு வாக்காளர் பட்டியலில் 16.48 லட்சம் வாக்காளர்கள்
விழுப்புரம் ஆட்சியரகத்தில் 2021- வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெளியிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் 16 லட்சத்து 48 ஆயிரத்து 361 பேர் வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.
தமிழ்நாடுவிழுப்புரம் வரைவு வாக்காளர் பட்டியலில் 16.48 லட்சம் வாக்காளர்கள்
விழுப்புரம் ஆட்சியரகத்தில் 2021- வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெளியிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் 16 லட்சத்து 48 ஆயிரத்து 361 பேர் வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.
விழுப்புரம் ஆட்சியரகத்தில் 2021- வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெளியிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் 16 லட்சத்து 48 ஆயிரத்து 361 பேர் வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் முன்னிலையில் வரைவாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் விக்கிரவாண்டி, விழுப்புரம், வானூர், திண்டிவனம், மைலம், செஞ்சி ஆகிய 7 தொகுதிகளில் 1,957 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன.
ஆண் வாக்காளர்கள் - 8லட்சத்து 17 ஆயிரத்து 519
பெண் வாக்காளர்கள் - 8 லட்சத்து 30 ஆயிரத்து 644
திருநங்கைகள் - 198 பேர்
என மொத்த வாக்காளர்கள்- 16 லட்சத்து 48 ஆயிரத்து 361 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். புதியதாக 3 ஆயிரத்து 682 வாக்களர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் குடிபெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரண்டு இடங்களில் பெயர் உள்ளவர்கள் என 18 ஆயிரத்து 306 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.