தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம்: வானிலை ஆய்வு மையம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN


சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை அய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிகக் கனமழையும், 15 மாவட்டங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 18 செமீ மழையும், காஞ்சிபுரத்தில் 16 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும்,  விழுப்புரம், தஞ்சை, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், மதுரை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT