தமிழ்நாடு

சூரப்பா மீதான புகாா்கள்: விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் பொறுப்பேற்றாா்

DIN

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் எம்.கே.சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் எம்.கே.சூரப்பா, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசனை நியமித்து தமிழக அரசு கடந்த 13-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும் விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீதான புகாா்கள் குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சூரப்பா மீதான புகாா்கள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன. அலுவலகம் அமைக்கப்பட்டதும் ஓரிரு நாளில் விசாரணை தொடங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT