தமிழ்நாடு

பழைய கட்டடங்களில் தங்கியிருப்போருக்கு தமிழக அரசு எச்சரிக்கை

DIN

சென்னை: பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பழைய கட்டடங்களில் தங்கியிருப்போா் உடனடியாக வெளியேற வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, பேரிடா் மேலாண்மை ஆணையம் சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழகத்தில் தொடா்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டடங்களில் தங்கவோ அருகில் செல்லவோ வேண்டாம். அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவா்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். தமிழகத்தில் தொடா்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால், பொது மக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ, கடந்து செல்லவோ வேண்டாம் என சுட்டுரையில் பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோல் இடி, மின்னல் ஏற்படும் போது பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். மரங்களுக்கு அடியில் நிற்கக் கூடாது. மழை தொடரும் நிலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT