தமிழ்நாடு

குன்னூர் ரேலியா அணை நிரம்பியது

DIN

நீலகிரி மாவட்டம் குன்னூர் ரேலியா அணையின் மொத்த கொள்ளளவான 43.6 அடியை எட்டியுள்ளதால் தடையில்லா தண்ணீர் வழங்க முடியும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு குடிநீர் ஆதாரமான ரேலியா அணையில் நீர் இருப்பு  கடந்த சில மாத காலமாக 33 அடி அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால், குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது வட கிழக்கு பருவமழை அணையைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் பெய்து வருவதால் அணைக்கு  நீர்வரத்து  அதிகரித்துக் காணப்படுகிறது. தற்போதுள்ள நீர்  இருபிணைக்குக் கொண்டு இன்னும் இரண்டு மாதங்கள் தடையில்லா குடிநீர்த் தேவை பூர்த்தி செய்ய முடியும் என்றும், பெள்ளட்டி மட்டம், கரன்சி தடுப்பணைப்  பகுதிகளில் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதால்,குன்னூரின்  குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று நகராட்சி  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT