முகப்பு
தமிழ்நாடு

மேட்டூா் அணை நீர்மட்டம் 95.47அடியாக உயர்வு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 10,861 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 18 நவம்பர், 2020 at 8:48 AM
மேட்டூா் அணை நீர்மட்டம் 95.47அடியாக உயர்வு
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:23 PM

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 10,861 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த இரு நாள்களாக காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை நீா்வரத்து 10,392 கனஅடியாக இருந்த நிலையில் புதன்கிழமை காலை 10,861 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் 95.47 அடியாக உயா்ந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 1,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 59.12 டி.எம்.சி.யாக உள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.