தமிழ்நாடு

குமரப்பேட்டையில் நாக சதுர்த்தி விழா

DIN

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள குமரப்பேட்டையில் நாக சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

குமரப் பேட்டை கிராமத்தில் பெரியபாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இக்கோயில். இக்கோயிலுக்குக் கிராம மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து முனீஸ்வரன் ஆலயம் அருகே அமைந்துள்ள புற்றில் நாகத்திற்கு பால் மற்றும் முட்டை ஊற்றியும், படையல்கள் படைத்தும் வழிபாடு செய்து நாக தேவதை அருளைப் பெற்றனர். 

பெண்களும் காலை முதலே விரதம் இருந்து புற்று கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து சென்றனர். ஏராளமானோர் வழிபாடு செய்ய ஒரே சமயத்தில் வந்ததால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT