முகப்பு
தமிழ்நாடு

ஓமலூரில் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 

Updated On : 19 நவம்பர், 2020 at 5:48 PM
சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆயத்தப் பணிகளில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் வருகைதந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் புறநகர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக சேலத்திலிருந்து அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு வருகைதந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement

இதனைத்தொடர்ந்து சேலம் புறநகர் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ஓமலூர் மேட்டூர் சங்ககிரி ஏற்காடு ஆத்தூர் கெங்கவல்லி வீரபாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் நகரச் செயலாளர்கள் மற்றும் அதிமுக சார்பு அணி நிர்வாகிகள் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் அதற்காக அதிமுக சார்பில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும் நேரில் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். 

அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் அதிமுக நிர்வாகிகள் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டார். 

ஆலோசனைக் கூட்டத்தில், அமைப்புச் செயலாளர் செம்மலை ,சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவான ஜி வெங்கடாஜலம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓமலூர் வெற்றிவேல், ஆத்தூர் சின்னதம்பி தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.