உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் சனிக்கிழமை பெருக்கு எடுத்துச்செல்லும் வெள்ளநீர். 
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை, சண்முகா நதி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து குறைந்தது

வடகிழக்கு பருவமழை கடந்த இரு தினங்களாக குறைந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை மற்றும் சண்முகா நதி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து குறைந்தது.

DIN


உத்தமபாளையம்: வடகிழக்கு பருவமழை கடந்த இரு தினங்களாக குறைந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை மற்றும் சண்முகா நதி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து குறைந்தது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் தொடர் சாரல் மழையும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை மற்றும் சண்முகா நதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

ஆனால் வெள்ளிக்கிழமை காலை முதல் மழைப்பொழிவு சற்று குறைந்தது.

இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 4,822 கன அடியிலிருந்து 4,688 ஆக குறைந்தது.

அதேபோல சண்முகா நதி நீர்த் தேகத்திற்கு 252 கன அடியிலிருந்து 78 அடியாக குறைந்தது.

நீர் திறப்பு அதிகரிப்பு: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1355 கன அடியிலிருந்து 1511 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக.26 இல் பிரதமர் மோடி தமிழக வருகை ரத்து

ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தெ.ஆ. வீரர்!

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

யமுனை ஆற்றில் உயரும் நீர்மட்டம்! தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்! | Uttarakhand

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

SCROLL FOR NEXT