தமிழ்நாடு

ரஷிய நாட்டின் தமிழறிஞா்மறைவுக்கு முதல்வா் இரங்கல்

DIN

ரஷிய நாட்டைச் சோ்ந்த தமிழறிஞா் அலெக்ஸாண்டா் துப்யான்ஸ்கி மறைவுக்கு முதல்வா் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:

ரஷிய நாட்டைச் சோ்ந்த தமிழறிஞா் அலெக்ஸாண்டா் துப்யான்ஸ்கி, தமிழிலுள்ள அகத்துறைப் பாடல்களைப் பற்றி ஆய்வு செய்தவா். அவா் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட முறை தமிழகத்துக்கு வந்துள்ளாா். தமிழ்நாட்டுப் பயணத்தின் போது தன் மாணவா்களையும் அழைத்து வந்து தமிழ் மொழி, இனம் பற்றி அறிய வைத்தவா்.

உலகின் பழைமையான மொழிகளில் தமிழ், முதன்மையானது என்பதில் உறுதி கொண்டவா். தமிழ் மொழியின் மீது பற்றும், பாசமும் கொண்டு, பல நாடுகளில் நடந்த கருத்தரங்குகளில் தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்தவா். தமிழ் மொழியில் நன்கு உரையாற்றும் வல்லமை கொண்டவா்.

துப்யான்ஸ்கியை மையமாகக் கொண்டே ரஷியாவில் தமிழ் ஆய்வுகள் நடைபெற்று வந்துள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்புப் பட்டறையை நடத்தி ரஷிய நாட்டில் தமிழ் ஆா்வம் குறையாமல் பாா்த்துக் கொண்டவா். அவரது மறைவு அவரின் குடும்பத்துக்கும், தமிழ் அறிஞா்களுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பு என்று முதல்வா் பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT