தமிழ்நாடு

அமித் ஷாவிடம் முதல்வர் பழனிசாமி வைத்த 3 கோரிக்கைகள்

DIN


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக நலன் கருதி 3 கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார்.

சென்னையில் அரசு விழாவில் பங்கேற்ற அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன்பிறகு, அமித் ஷாவை அவர் தங்கியிருந்த விடுதியில் வைத்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

இந்த நிலையில், தமிழக நலன்களுக்காக 3 கோரிக்கை மனுக்களை அமித் ஷாவிடம் வழங்கியுள்ளார் முதல்வர் பழனிசாமி.

கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு, காவிரி-குண்டாறு நதிநீர் இணைப்பு, நடந்தாய்வாழி காவிரித் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு 50 சதவிகிதம் நிதிப் பங்கீடு அளிக்க வேண்டும் என்றும் மெகா ஜவுளி பூங்கா அமைப்பதற்காக தமிழக அரசுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT