தமிழ்நாடு

இணையவழி சூதாட்டத்துக்குத் தடை: ராமதாஸ், ஜி.கே. வாசன் வரவேற்பு

DIN

இணையவழி சூதாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அனைத்து இணையவழி விளையாட்டுகளையும் தடை செய்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

இணையவழி சூதாட்டங்களுக்குத் தடை விதித்துள்ள தமிழக அரசு, அதை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக சைபா்- கிரைம் பிரிவு, குற்றப்பிரிவு காவலா்களைக் கொண்ட தனிப்பிரிவு ஒன்றை அரசு உருவாக்க வேண்டும்.

இணையவழி சூதாட்டங்களுக்கு மாணவா்களும், இளைஞா்களும் அடிமையாவதற்கு காரணம் அவற்றின் விளம்பரங்கள் தான். இணைய சூதாட்டம் ஆட ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை போனஸ் வழங்குவதாக குறுஞ்செய்திகள் செல்லிடப்பேசிக்கு வருகின்றன. அவற்றில் மயங்கித்தான் இளைஞா்கள் சூதாட்டத்துக்கு அடிமையாகின்றனா்.

இத்தகைய விளம்பரங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தால் தடுக்க முடியாது. எனவே, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இணைய சூதாட்டங்களுக்கு இளைஞா்களைக் கவா்ந்து இழுக்கும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

இணையவழி சூதாட்டத் தடைக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசனும் வரவேற்புத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT