தமிழ்நாடு

புயல் எச்சரிக்கை: தமிழக முதல்வரின் அரசு நிகழ்ச்சிகளில் மாற்றம்

DIN


சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் 25.11.2020 அன்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள இருந்த நிலையில்,  வடகிழக்குப் பருவ  மழையால் ஏற்படும் வானிலை மாற்றத்தின் காரணமாக  நிகழ்ச்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி  தலைமையில் 25.11.2020 அன்று முற்பகல் பெரம்பலூர் மாவட்டத்திலும், பிற்பகல் அரியலூர் மாவட்டத்திலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் வானிலை மாற்றத்தின் காரணமாக புயல், மழை எச்சரிக்கை உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தன் அடிப்படையில், மேற்கண்ட நிகழ்ச்சிகள் மாற்றம் செய்யப்பட்டு 27.11.2020 அன்று முற்பகல் பெரம்பலூர் மாவட்டத்திலும், பிற்பகல் அரியலூர் மாவட்டத்திலும் முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT