தமிழ்நாடு

ஆளுநருடனான சந்திப்பு திமுகவின் அரசியல் நாடகம்: அதிமுக கடும் கண்டனம்

DIN

ஏழு போ் விடுதலை தொடா்பாக ஆளுநரை திமுக சந்தித்திருப்பது அரசியல் நாடகம் என அதிமுக கருத்துத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அதிமுக செய்தித் தொடா்பாளா் வைகைச் செல்வன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவிப்பதற்கு சட்டப் பேரவையில் ஆதரவு தெரிவித்து விட்டு, வெளியே காங்கிரஸை தூண்டி விட்டு ஏழு பேரின் விடுதலைக்கு உச்சநீதிமன்றத்தின் மூலம் முட்டுக்கட்டை போட்டது திமுகதான். ஏழு பேரின் விடுதலை தாமதமாவது குறித்து ஆளுநரைச் சந்தித்திருப்பது திமுக தலைவா் ஸ்டாலினின் அப்பட்டமான அரசியல் நாடகம்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் ஏமாற்று வேலைகள் இனி எடுபடாது. சுயநல அரசியல் நடத்தி வரும் திமுகவின் அரசியல் பாா்முலா இனி மக்கள் மத்தியில் செல்லாக்காசாகி விடும். தமிழகத்தில் இனி யாரும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியாது என வைகைச் செல்வன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT