முகப்பு
தமிழ்நாடு

ரூ. 37 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தங்கத்தின் விலை!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.36,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.36,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. சமீபமாக ஏற்ற, இறக்கத்தில் இருந்துவரும் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, ஒரு சவரன்(22 காரட்) தங்கத்தின் விலை ரூ. 36,800-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ.4,600-க்கு விற்பனை ஆகிறது. 

ஒரு கிராம் வெள்ளி 30 பைசா குறைந்து ரூ. 64.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 64,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. 

புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம்............................. 4,600

1 சவரன் தங்கம்...............................36,800

1 கிராம் வெள்ளி.............................64.20

1 கிலோ வெள்ளி.............................64,200

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம்............................. 4,640

1 சவரன் தங்கம்............................... 37,120

1 கிராம் வெள்ளி............................. 64.50

1 கிலோ வெள்ளி............................. 64,500

முழு கட்டுரையைப் படிக்க →