தமிழ்நாடு

நிவர் புயல் பாதிப்பு: வேளச்சேரி, தரமணி பகுதிகளில் ஓபிஎஸ் நேரில் ஆய்வு

DIN

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் புதன்கிழமை இரவு 10.58 மணிக்கு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கத் தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை 3.58 மணிக்கு முழுமையாக கரையைக் கடந்தது. 

புயல் கரையைக் கடந்தபோது, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. சென்னை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்தது. சென்னையிலும் இரவு பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT