செல்லிடப்பேசி திருடனை துரத்திச் சென்று பிடித்த காவல் ஆய்வாளரை சென்னை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார். 
தமிழ்நாடு

செல்லிடப்பேசி திருடனை துரத்திச் சென்று பிடித்த காவல் ஆய்வாளர்: விடியோ வெளியீடு

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தற்போது செல்லிடப்பேசி மற்றம் சங்கிலிப் பறிப்புத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

DIN


சென்னை: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தற்போது செல்லிடப்பேசி மற்றம் சங்கிலிப் பறிப்புத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

தலைக்கவசம் அணிந்து கொண்டு, திருடிய இரு சக்கர வாகனத்தில் வரும் கொள்ளையர்கள், சாலையில் நடந்து செல்வோரிடம் இருந்து செல்லிடப்பேசிகளையும், தங்கச் சங்கிலிகளையும் பறித்துச் செல்கிறார்கள்.

இதில், துப்பு துலங்குவது காவல்துறைக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவது வழக்கம். இந்த நிலையில், சென்னையில், செல்லிடப்பேசி திருடர்களை காவல்துறை ஆய்வாளர் அன்டிலின் ரமேஷ் தனியாளாக இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று போராடி பிடித்துள்ளார்.

இதன்மூலம், செல்லிடப்பேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மேலம் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து 11 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விடியோ, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இதனை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் அகர்வால் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து, காவல் ஆய்வாளர் ஆன்டிலின் ரமேஷின் பணியை பாராட்டியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT