முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது
பகிர்:

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது.

அதன்படி இன்று காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.4,574 ஆக உள்ளது. 

அதேசமயம் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.64.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.64,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,574

1 சவரன் தங்கம்...............................36,592

1 கிராம் வெள்ளி.............................64.70

1 கிலோ வெள்ளி.............................64,700

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,589

1 சவரன் தங்கம்...............................36,712

1 கிராம் வெள்ளி.............................64.70

1 கிலோ வெள்ளி.............................64,700

முழு கட்டுரையைப் படிக்க →