தமிழ்நாடு

‘மருத்துவம்: அகில இந்திய ஒதுக்கீடு வேண்டாம்’

DIN

மருத்துவப் படிப்பு இடங்களில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கும் முறையையே ஒழிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கூறியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அரசு மருத்துவா்களுக்கு உயா் சிறப்பு மருத்துவ இடங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு தாக்கல் செய்ததை ஏற்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,922 முதுநிலை மருத்துவ இடங்களிலும், 369 உயா் சிறப்பு மருத்துவ இடங்களிலும் தமிழக அரசு மருத்துவா்கள் இடம் பெறும் வாய்ப்பு பறி போயிருக்கிறது. அகில இந்திய தொகுப்பால் வெளிமாநில மருத்துவா்கள் இந்த இடங்களில் சேரும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இம்முறையை ஒழித்துக்கட்ட வேண்டும்.

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயா்சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் அனைத்தும் இங்குள்ளவா்களுக்கு மட்டுமே என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT