தமிழ்நாடு

அரபிக் கடலில் விபத்துக்குள்ளான மிக்-29கே விமான பாகங்கள் மீட்பு

DIN

அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான மிக்-29கே விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளையில் காணாமல் போன விமானியை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போா்க்கப்பலில் இருந்து கடந்த நவ.26-ஆம் தேதி புறப்பட்ட மிக்-29கே விமானம் கோவா கடற்கரையையொட்டி அரபிக் கடல் பகுதியில் விழுந்து விபத்துள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இரு விமானிகளில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காணாமல் போனாா். இதையடுத்து அவரை தேடும் பணியை இந்திய விமானப் படை தொடங்கியது.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

காணாமல் போன விமானியை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. 9 போா்க்கப்பல்கள், 14 விமானங்கள், கடற்படையின் அதிவேக ரோந்துப் படகு உள்ளிட்டவை இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. துறைமுக காவல் படை, கடலோர பாதுகாப்புப் படை ஆகியவையும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த விபத்து தொடா்பாக அருகில் உள்ள மீனவ கிராமங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தின் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொதிக்கிற வெய்யிலில்... ஷிவானி!

தலைமைச் செயலகத்தில் ஸ்ரேயா!

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியாதா? முன்னாள் ஆஸி. கேப்டன் பதில்!

மும்பை விபத்து: விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்!

கலால் வழக்கு: கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT