சென்னையில் கரோனா நிலவரம்: கோடம்பாக்கத்தை வீழ்த்திய அடையாறு
சென்னையில் இதுவரை கோடம்பாக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 375 ஆகக் குறைந்தது.
சென்னை: சென்னையில் இதுவரை கோடம்பாக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 375 ஆகக் குறைந்தது. அதேவேளையில் அடையாறில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,754 ஆக உள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 2% ஆகும்.
சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 2,14,976 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2,07,375 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,847 பேர் பலியாகியுள்ளனர். இது 1.79 சதவீதமாகும்.
கரோனா பாதித்தவர்களில் 59.86 சதவீதம் பேர் ஆண்கள், 40 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
சென்னையிலேயே அதிகபட்சமாக இதுவரை அண்ணாநகர் இருந்து வந்த நிலையில், இன்று அடையாறில் 414 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கடுத்த நிலையில் திருவிகநகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 300க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டல வாரியாக கரோனா நிலவரம்..